/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தரமான விதைகள் வழங்காததால் நெற்கதிர் பதராக மாறும் அவலம்
/
தரமான விதைகள் வழங்காததால் நெற்கதிர் பதராக மாறும் அவலம்
தரமான விதைகள் வழங்காததால் நெற்கதிர் பதராக மாறும் அவலம்
தரமான விதைகள் வழங்காததால் நெற்கதிர் பதராக மாறும் அவலம்
ADDED : அக் 26, 2025 11:12 PM

காஞ்சிபுரம்: அரசு தரமான விதைகள் வழங்காததால், பயிர்கள் கதிர்விட்டாலும் முதிர்ச்சி பெறாமல், பதராக மாறி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் கோவிந்தவாடி அடுத்த வேளியூர் கிராம விவசாயிகள், 100 ஏக்கர் பரப்பளவில், நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
பெரும்பாலான விவசாயிகளின் வயலில் நெற்கதிர் விட துவங்கியுள்ளது. இந்த நெற்கதிர்கள் முதிர்ச்சி பெறாமல் பதராக மாறிவிட்டதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, வேளியூர் விவசாயிகள் கூறியதாவது:
எங்கள் கிராமத்தில், 100 ஏக்கர் நிலத்தில், பாபட்லா ரக நெல் சாகுபடி செய்துள்ளோம். இந்த நெல், கதிர் பிடித்து வருகிறது. நெல் மணிகள் முதிர்ச்சி பெறாமல், பதராக மாறி உள்ளது.
அதிகாரிகளிடம் முறையிட்டால், ஆய்வு செய்கிறோம் என்கின்றனர். கடைகளில் தரமான விதைகள் விற்கப்படுவது இல்லை.
இதை நம்பி சாகுபடி செய்துவிட்டு, மூன்று மாதங்களிலே பலன் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

