/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் கொள்முதல் நிலையங்கள் 4 இடங்களில் திறப்பு
/
நெல் கொள்முதல் நிலையங்கள் 4 இடங்களில் திறப்பு
ADDED : மார் 22, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் தாலுகாவில், புதுப்பாக்கம், கோவிந்தவாடி, கம்மவார்பாளையம், கொட்டவாக்கம் ஆகிய நான்கு கிராமங்களில், நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு, வாலாஜாபாத் தி.மு.க.,- ஒன்றியக் குழு சேர்மன் தேவேந்திரன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.
வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய தி.மு.க.,வினர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.