/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
40 அடி உயர ஏணியில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி
/
40 அடி உயர ஏணியில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி
40 அடி உயர ஏணியில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி
40 அடி உயர ஏணியில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி
ADDED : பிப் 08, 2025 09:26 PM
ஸ்ரீபெரும்புதுார்,:சென்னையை சேர்ந்தவர் ஆல்பர்ட் டேனியல், 55, பெயின்டர். ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில், கூரைக்கு பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று மாலை, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், 40 அடி உயரமுள்ள ஏணியின் மீது ஏறி, பெயின்ட் அடித்துக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக, ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.