/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழாய் உடைந்து குளமான சாலை ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
/
குழாய் உடைந்து குளமான சாலை ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
குழாய் உடைந்து குளமான சாலை ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
குழாய் உடைந்து குளமான சாலை ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
ADDED : ஜன 25, 2025 02:59 AM

ஸ்ரீபெரும்புதுார்,
குன்றத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட செரப் பனஞ்சேரி ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு குழாய் வாயிலாக, ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், கன்னியம்மன் கோவில் அருகே, குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. இரு வாரங்களுக்கு மேலாக வெளியேறும் தண்ணீர், செரப்பனஞ்சேரி -- காஞ்சிவாக்கம் சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது.
இதனால், அவ்வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால், நடந்து செல்வோர் மீது தண்ணீர் தெளிப்பதால், மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் தண்ணீரில் செல்லும் போது, வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
ஊராட்சி அலுவலகம் அருகே இருந்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, குடிநீர் வீணாவதை தடுத்து, குழாய் உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.