/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவர்களை புத்தக கண்காட்சிக்கு அழைத்து வர ஊராட்சி குழு தீர்மானம்
/
மாணவர்களை புத்தக கண்காட்சிக்கு அழைத்து வர ஊராட்சி குழு தீர்மானம்
மாணவர்களை புத்தக கண்காட்சிக்கு அழைத்து வர ஊராட்சி குழு தீர்மானம்
மாணவர்களை புத்தக கண்காட்சிக்கு அழைத்து வர ஊராட்சி குழு தீர்மானம்
ADDED : பிப் 04, 2024 05:59 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்திற்கு, தி.மு.க., - மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி குழு உதவியாளர் தனசேகரன் தீர்மானங்களை வாசித்தார். பிப்., 9ம் தேதி முதல், பிப்., 19ம் தேதி வரை மாவட்ட அளவில், புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சிக்கு, ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும், தங்கள் பகுதிகளில் இருக்கும் மாணவ - மாணவியருக்கு புத்தங்களை வாங்கி கொடுக்கவும்.
உள்ளாட்சி பிரதிகள், தங்கள் பகுதியைச் சேர்ந்த மாணவ - மாணவியரை புத்தக கண்காட்சிக்கு அழைத்து வந்து, வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.