/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இளையனார்வேலுார் நுாலகத்தில் செயல்படும் ஊராட்சி அலுவலகம்
/
இளையனார்வேலுார் நுாலகத்தில் செயல்படும் ஊராட்சி அலுவலகம்
இளையனார்வேலுார் நுாலகத்தில் செயல்படும் ஊராட்சி அலுவலகம்
இளையனார்வேலுார் நுாலகத்தில் செயல்படும் ஊராட்சி அலுவலகம்
ADDED : ஏப் 01, 2025 12:10 AM
வாலாஜாபாத், வாலாஜாபாத் அடுத்த, இளையனார்வேலுாரில், பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிய கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் இயங்கி வந்தது. அக்கட்டடம் மிகவும் பழுதடைந்ததையடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதையடுத்து, பழுதான அக்கட்டடத்தால் விபத்து அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, ஊாராட்சி நிர்வாகம் சார்பில் ழுமுமையாக இடித்து அகற்றம் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து, இதுவரை இளையனார்வேலுாரில் ஊராட்சிக்கான அலுவலக கட்டடம் ஏற்படுத்தபடாமல் உள்ளது. இதனால், ஊராட்சி சம்பந்தமான பணிகள் அப்பகுதியில் உள்ள நுாலக கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நுாலகமும், ஊராட்சி அலவலகமும் ஒரே கட்டடத்தில் செயல்படுவதால், ஊராட்சி நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் இடநெருக்கடிக்கு ஆளாகின்றனர்.
எனவே, இளையனார்வேலுாரில் ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

