/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பங்குனி உத்திர திருக்கல்யாணம் வசிஷ்டேஸ்வரர் கோவில் புதுப்பொலிவு
/
பங்குனி உத்திர திருக்கல்யாணம் வசிஷ்டேஸ்வரர் கோவில் புதுப்பொலிவு
பங்குனி உத்திர திருக்கல்யாணம் வசிஷ்டேஸ்வரர் கோவில் புதுப்பொலிவு
பங்குனி உத்திர திருக்கல்யாணம் வசிஷ்டேஸ்வரர் கோவில் புதுப்பொலிவு
ADDED : மார் 18, 2024 03:13 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரி பின்புறம் சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில், வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா வரும் 24ல் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதில், முதற்கட்டமாக காஞ்சிபுரம் திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப் பணி அறக்கட்டளை குழு சார்பில் உழவாரப் பணி நேற்று நடந்தது. இதில், கோவில் வளாகம் முழுதும் ஒட்டடை அடித்து சுத்தம் செய்யப்பட்டது.
கோவில் உட்புறம் மற்றும் வெளிப்புற சுற்றுச்சுவர்களுக்கு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதனால், வசிஷ்டேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவையொட்டி புதுப்பொலிவு பெற்றுள்ளது.