/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் பங்குனி உத்திர உத்சவம் விமரிசை
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் பங்குனி உத்திர உத்சவம் விமரிசை
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் பங்குனி உத்திர உத்சவம் விமரிசை
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் பங்குனி உத்திர உத்சவம் விமரிசை
ADDED : ஏப் 12, 2025 12:29 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஏழு அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, மூலவர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரணிய சுவாமி, உற்சவர் கோடையாண்டவர் முருகபெருமானுக்கு பால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மூலவர் முருகப்பெருமானுக்கு சந்தன காப்பு அலங்காரமும், வள்ளி, தெய்வானை குங்கும காப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சஷ்டி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் மலர் அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் முருகபெருமானை வழிப்பட்டனர். ஏற்படுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.