/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்விளக்கு இல்லாத சாலையால் பீதி
/
மின்விளக்கு இல்லாத சாலையால் பீதி
ADDED : ஜன 03, 2025 07:47 PM
வாலாஜாபாத்:காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், வாலாஜாபாத் அருகே சங்கராபுரம் கூட்டுச்சாலை உள்ளது. இப்பகுதியில் இருந்து சங்கராபுரம், லிங்காபுரம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக தேவரியம்பாக்கம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது.
சங்கராபுரம் சுற்றுவட்டார கிராம வாசிகள், இச்சாலையை பயன்படுத்தி வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், சங்கராபுரம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர், தேவரியம்பாக்கம் வழியாக வாரணவாசி, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இரவு, பகலாக பணிக்கு சென்று திரும்புகின்றனர்.
இந்த வழித்தடத்தில், குடியிருப்புகள் உள்ளடங்கிய பகுதிகளை தவிர்த்து, மற்ற சாலை பகுதிகளில் மின்விளக்கு வசதி இல்லாத நிலையை தொடர்கிறது.
இதனால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மின் வசதி இல்லாததால், சமூக விரோத செயல்களுக்கு வழிவகுக்கும் என அச்சப்படுகின்றனர்.
எனவே, சங்கராபுரம்- - தேவரியம்பாக்கம் இணைப்பு சாலையில், மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.