/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மதுார் கூட்டுச்சாலையில் சாய்ந்த பேனரால் பீதி
/
மதுார் கூட்டுச்சாலையில் சாய்ந்த பேனரால் பீதி
ADDED : டிச 28, 2024 01:01 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில், பழையசீவரத்தில் பிரிந்து, திருமுக்கூடல் வழியாக சாலவாக்கம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், திருமுக்கூடல் அடுத்த மதுார் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தம் உள்ளது.
இப்பேருந்து நிறுத்த சாலையோரம், தனியார் நிறுவனம் சார்பில் வீட்டு மனை விற்பனை குறித்த விபரங்கள் அடங்கிய விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக, இந்த பேனரை தாங்கி நிற்கும் ஒரு பக்கத்திற்கான மரக்கம்பு விலகி, விளம்பர பதாகை சாய்ந்த நிலையில் உள்ளது. காற்றின் வேகத்திற்கு ஏற்ப ஆட்டம் போடும் இந்த பேனரால், அப்பகுதி வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்,சாலையோரம் சாய்ந்த நிலையிலான விளம்பர பதாகையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

