/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் பைக்குகள்
/
சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் பைக்குகள்
ADDED : அக் 22, 2024 07:37 AM

தண்டலம் : ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில், தனியார் கல்லுாரி, மருத்துவமனை, தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
இங்கு வரும் இருசக்கர வாகனங்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையிலும், செட்டிப்பேடு சாலையிலும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
இதனால், அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும், காலை, மாலை நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, தனியார் கல்லுாரி, மருத்துவமனை, தொழிற்சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்.
அதையும் மீறி சாலையோரம் ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.