/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் நெடுஞ்சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து அபாயம்

ADDED : மே 23, 2025 01:58 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் இருந்து, புக்கத்துறை வழியாக, செங்கல்பட்டு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
இந்த சாலை, இருவழிச் சாலையாக இருந்தபோது போதிய இடவசதி இல்லாமல் இருந்தது. இதனால் அடிக்கடி இச்சாலையில் விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
இந்நிலையில், இச்சாலையை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, 2022ல், 55 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
தற்போது, உத்திரமேரூர் பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையோரத்தில், இருபுறமும் லாரி, பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வருகின்றன.
இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் முன்னே செல்லும் வாகனத்தை முந்தி செல்ல முயலும்போது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டு வருகின்றன.
எனவே, நெடுஞ்சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.