/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரைகுறையாக வடிகால்வாய் பணி கோனேரிகுப்பம் பகுதியினர் அவதி
/
அரைகுறையாக வடிகால்வாய் பணி கோனேரிகுப்பம் பகுதியினர் அவதி
அரைகுறையாக வடிகால்வாய் பணி கோனேரிகுப்பம் பகுதியினர் அவதி
அரைகுறையாக வடிகால்வாய் பணி கோனேரிகுப்பம் பகுதியினர் அவதி
ADDED : டிச 14, 2024 01:32 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மின் நகர், அகத்தியர் தெருவில், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கும் பணி கடந்த நான்கு மாதங்களுக்கு முன் நடந்தது. இப்பணியை முழுமையாக முடிக்காமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளது.
இதனால், கால்வாயில் தேங்கியுள்ள மழைநீரும், அகத்தியர் தெரு மற்றும் சுற்றியுள்ள தெருக்களில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற வழித்தடம் இல்லாததால், ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. இதனால், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால், மின்நகரில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, அகத்தியர் தெருவில் அரைகுறையாக விடுபட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் பணியை முழுமையாக முடிக்க காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின் நகர் பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.