sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெல் கொள்முதல் நிலையங்களில் கட்சியினர் ஆதிக்கம்...அதிகரிப்பு:அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் விவசாயிகள் தவிப்பு

/

நெல் கொள்முதல் நிலையங்களில் கட்சியினர் ஆதிக்கம்...அதிகரிப்பு:அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் விவசாயிகள் தவிப்பு

நெல் கொள்முதல் நிலையங்களில் கட்சியினர் ஆதிக்கம்...அதிகரிப்பு:அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் விவசாயிகள் தவிப்பு

நெல் கொள்முதல் நிலையங்களில் கட்சியினர் ஆதிக்கம்...அதிகரிப்பு:அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் விவசாயிகள் தவிப்பு


ADDED : ஏப் 09, 2025 09:36 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 09:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், அரசியல் கட்சியினரின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர் என, விவசாயிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், 1.50 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில், சம்பா மற்றும் நவரை ஆகிய இரு பருவங்களிலும், 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

ஆனால், சொர்ணவாரி பருவத்தில், தண்ணீர் பற்றாக்குறை, கோடை வெயில் உள்ளிட்ட காரணங்களால், 30,000 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே, விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு பருவத்திற்கும் நெல் அறுவடை செய்யும் போது, நுகர்பொருள் வாணிப கழகத்தினர், நெல் கொள்முதல் நிலையங்களை துவக்குகின்றனர். கொள்முதல் செய்யப்படும் நெல், அரிசியாக மாற்றி, கூட்டுறவு துறைக்கு கொடுத்து விடுகின்றனர்.

இதில், நவரை பருவத்திற்கு மட்டும் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் மாவட்டம் முழுதும் துவக்கப்படுகின்றன. குறிப்பாக, நுகர்பொருள் வாணிப கழகத்தில் மட்டுமல்லாது, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினரும், நவரை பருவத்திற்கு நெல் கொள்முதல் நிலையங்களை துவக்கி, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், கொள்முதல் நிலையங்களில் உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்தோர் நெல் கொள்முதல் செய்து வந்தனர்.

அப்போது, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையத்திற்கு வரத்து அதிகமாக இருப்பதால், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யவில்லை என, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் இடையே குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, விவசாய சங்கத்தினர், விவசாயிகள் குழு கூட்டமைப்புகள் மற்றும் விவசாயம் சார்ந்த நபர்களிடம் நெல் கொள்முதல் நிலையங்களை நடத்தலாம் என, தளர்வு அளிக்கப்பட்டது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், விவசாயிகள் என்ற பெயரில் தி.மு.க.,வைச் சேர்ந்த கிளை, ஒன்றியம், மாவட்டம் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இருக்கும் நபர்களை, நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களை நடத்த அனுமதி அளித்துள்ளனர்.

இதற்கு காரணம், விவசாயிகளிடம் இருந்து, 40 கிலோ நெல் மூட்டைக்கு 65 - 75 ரூபாய் வரையில் வசூலிக்கும் பணம், நெல் துாற்றுவோர், நெல் மூட்டை ஏற்றுவோர், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளின் போக்குவரத்து செலவு, அரசியில் கட்சியினருக்கு, 'கட்டிங்' என, பலவிதமாக கணக்கீடு செய்து வசூலித்து வருகின்றனர்.

இதை தட்டிக் கேட்க வேண்டிய நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் அந்தந்த பகுதி ஒன்றியக்குழு சேர்மன், ஆளும் கட்சி ஒன்றிய செயலர், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., ஆகியோரின் பேச்சை கேட்டு தான் மவுனம் காத்து வருகின்றனர்.

மேலும், நெல் கொள்முதல் முடிவடைந்த பின், நுகர்பொருள் வாணிப கழகத்திடம் இருந்து ஒரு மூட்டைக்கு, 10 ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த பணம் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு வழங்குவதில்லை.

ஆளும் கட்சியினர் மற்றும் நுகர் பொருள் வாணிப கழகத்தினர் 'சிண்டிகேட்' போட்டு வாரி சுருட்டி சென்று விடுகின்றனர்.

இதனால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இதை தவிர்க்க, நெல் மூட்டைக்கு வாங்கும் பணத்தை விவசாயிகளிடம் இருந்து வாங்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:

நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்யும், விவசாயிகளின் ஆவணங்களின் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்கிறோம்.

நெல் மூட்டைகள் ஏற்றுகூலி, நெல் சுத்தம் செய்யும் கூலி வசூலிப்பு குறித்து கொள்முதல் நிலையத்தை நடத்துவோருக்கு தான் தெரியும் எங்களுக்கு ஒன்றும் தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கிடைக்கும் பணத்தில் சுற்றுலா


நெல் கொள்முதல் நிலையத்தில், 40 கிலோ அடங்கிய ஒரு மூட்டை நெல் சுத்தம் செய்து ஏற்றுவதற்கு, 22 ரூபாய் மற்றும் கிடங்கில் இறக்குவதற்கு 10 ரூபாய் என, 32 ரூபாய் மட்டுமே செலவு செய்கின்றனர். அதே நெல் மூட்டைக்கு ஒரு விவசாயிடம் இருந்து, நெல் கொள்முதல் நிலையம் நடத்தும் அரசியல் கட்சியினர், 75 ரூபாய் வரையில் வசூலிக்கின்றனர்.
கூலியாட்களுக்கு கொடுத்தது போக, மீதம் 43 ரூபாய் நெல் கொள்முதல் நிலையம் நடத்தும் அரசியல் கட்சிகாரருக்கு லாபமாக நிற்கிறது. ஒரு பருவத்திற்கு, ஒரு நெல் கொள்முதல் நிலையத்தில், 20,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்தால், அவருக்கு 8.60 லட்சம் ரூபாய் வரையில் லாபமே கிடைக்கும். இதில், கட்சியினருக்கு நன்கொடை, சுற்றுலாவிற்கு அழைத்து செல்வது உள்ளிட்ட செயல்களுக்கு செலவு செய்துவிட்டு மீதி வாரி சுருட்டி செல்வது வாடிக்கையாக உள்ளது.








      Dinamalar
      Follow us