/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முச்சந்தியம்மன் கோவிலில் பார்வேட்டை உற்சவம்
/
முச்சந்தியம்மன் கோவிலில் பார்வேட்டை உற்சவம்
ADDED : மார் 01, 2024 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த வில்லிவலம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் கட்டுப்பாட்டில், முச்சந்தியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில், ஆண்டுதோறும் மாசிமக பார்வேட்டை உற்சவம் நடைபெறும். நடப்பாண்டு மாசிமக பார்வேட்டை உற்சவம், நேற்று மதியம் 2:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.
அதை தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு முயல் விடும் நிகழ்ச்சியும், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் முச்சந்தியம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.

