/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏர்போர்ட்டில் தானியங்கி முறையில் உடைமை கையாளும் வசதி துவக்கம்; இனி பயணியர் எளிதாக பறக்கலாம்!
/
ஏர்போர்ட்டில் தானியங்கி முறையில் உடைமை கையாளும் வசதி துவக்கம்; இனி பயணியர் எளிதாக பறக்கலாம்!
ஏர்போர்ட்டில் தானியங்கி முறையில் உடைமை கையாளும் வசதி துவக்கம்; இனி பயணியர் எளிதாக பறக்கலாம்!
ஏர்போர்ட்டில் தானியங்கி முறையில் உடைமை கையாளும் வசதி துவக்கம்; இனி பயணியர் எளிதாக பறக்கலாம்!
ADDED : நவ 12, 2024 12:53 AM
சென்னை: சென்னை விமான நிலைய நான்காவது முனையத்தின் புறப்பாடு பகுதியில், 'செல்ப் பேக்கேஜ் டிராப்' என்ற பயணியரின் உடைமைகளை கையாளும் தானியங்கி வசதி செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
பொதுவாக விமான நிலையங்களில் பயணியர், 'போர்டிங் பாஸ்' எடுத்த பின், உடைமைகளின் எடை உள்ளிட்டவற்றை பரிசோதித்து, பாதுகாப்பு பகுதிக்கு சென்று விமானத்தில் ஏறுவது வழக்கம். இதற்கு குறைந்தது 30 நிமிடங்களாவது ஆகிறது.
இதை கருத்தில் கொண்டு, உடைமைகளை கையாளுதலை எளிதாக்கும் வகையில், டிஜியாத்ரா, 'செல்ப் பேக்கேஜ் ட்ராப்' என்ற, உடைமைகளை எளிதாக தானியங்கி முறையில் கையாளும் தானியங்கி வசதி அமலில் உள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் உள்ள நான்காவது முனையத்தின் புறப்பாடு பகுதியில், இந்த நடைமுறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
தற்போது, நான்காவது முனையத்தின் புறப்பாடு பகுதியில் இயங்கும் விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணியர், செல்ப் பேக்கேஜ் ட்ராப் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனால், பயணியர் நீண்ட நேரம் உடைமைகளை ஏற்றுவதற்கு வரிசையில் காத்திருக்காமல், சுலபமாக பயணிக்கலாம். முதலாவது முனையத்தில் இந்த வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
என்ன செய்யணும்?
உடைமைகளை தானியங்கி முறையில் கையாளும் எட்டு பாதுகாப்பு தானியங்கி கவுன்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில், பயணியரே தனியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
* முதலில், பயண டிக்கெட்டில் உள்ள பி.என்.ஆர்., எண்னை பதிவிட வேண்டும். பின், ஆட்டோமேட்டிக் முறையில் போர்டிங் பாஸ் கிடைக்கும்
* அந்த பாஸ் - ஐ, தானியங்கி முறையில் உடைமைகளை கையாளும் இயந்திரத்தில் 'ஸ்கேன்' செய்ய வேண்டும்
* ஸ்கேன் செய்த பின், எடுத்து செல்லும் உடைமைகளின் எடை, அதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதாக என்ற விபரங்களை சரி பார்க்க வேண்டும்
* அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, 'டேக்' அச்சிட்டு வரும். அவற்றை எடுத்து, 'லக்கேஜ்'ஜில் ஒட்ட வேண்டும். பின், அங்கு செயல்படும் கன்வேயர் பெல்டில் வைக்க வேண்டும்
இவ்வாறு வைக்கப்படும் உடைமைகள், விமான நிறுவனத்தின் 'பேக்கேஜ் ஹேண்டிலிங்' பகுதிக்கு தானாக சென்று விடும்.
தற்போது இரு விமான நிறுவனங்களுக்கு மட்டும் பயன்பாட்டில் உள்ள இந்த முறை, சில நாட்களில் ஏர் இந்தியா விமான பயணியரும் பயன் பெறும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை விமான நிலையம் முழுதும் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளதால், இனி வரும் காலங்களில் பயணியர் எவ்வித சிரமமின்றி பயணிக்கலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.