/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரயில்கள் தாமதமாக வருவதாக பயணியர் குற்றச்சாட்டு
/
ரயில்கள் தாமதமாக வருவதாக பயணியர் குற்றச்சாட்டு
ADDED : ஆக 30, 2025 12:29 AM
காஞ்சிபுரம், தண்டவாளம் மாற்றும் பணியால், ரயில்கள் தாமதமாக வருவதாக, பயணியர் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே, மின்சார ரயில் செல்கிறது. இதில், வாலாஜாபாத், தக்கோலம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில், கட்டடம் கட்டும் பணி நடந்து வருகின்றன.
இதுதவிர, பழைய தண்டவாளங்களுக்கு பதிலாக, புதிய தண்டவாளங்களை மாற்றும் பணி நடந்து வருகின்றன.
இதனால், சரியான நேரங்களுக்கு வர வேண்டிய பெரும்பாலான மின்சார ரயில்கள் தாமதமாக வருகிறது என, பயணியர் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வருகின்றன.
இதனால், செங்கல்பட்டு மார்க்கத்தில் இருந்து, காஞ்சிபுரம் வழியாக, அரக்கோணம் செல்வோர் மிகுந்த சிரமத்துடன் ரயில் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛தண்டவாளம் மாற்றும் பணி நிறைவு பெற்ற பின், ரயில்கள் சீராக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

