/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியிலிருந்து சென்னைக்கு கூடுதல் மின்சார ரயில் கேட்கும் பயணியர்: வேலைக்கு செல்வோர் கூட்டம் குவிவதால் இடமின்றி நெருக்கடி

ADDED : ஏப் 26, 2025 06:57 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, தினமும் ஏராளமானோர் வேலை, கல்வி, தொழில், சிகிச்சை சம்பந்தமாக, சென்னை, செங்கல்பட்டு போன்ற இடங்களுக்கு ரயிலில் செல்கின்றனர்.
குறிப்பாக, மாவட்ட தலைநகரான காஞ்சிபுரத்திலிருந்து ஆயிரக்கணக்கான பயணியர், அன்றாடம் மின்சார ரயில்களையே நம்பி உள்ளனர்.
அவ்வாறு ரயில் வசதிகளை நம்பியுள்ளவர்களுக்கு, போதிய ரயில் சேவை காலை வேளையில் இல்லாததது, பயணியருக்கு அன்றாடம் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு அரசு, தனியார் நிறுவனங்களில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் ரயிலில் செல்கின்றனர். வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கையே, ரயிலின் பெரும்பகுதி நிரம்பிவிடும். பொதுமக்கள் ரயிலில் எளிதாக செல்ல முடியவில்லை என, நீண்ட நாட்களாகவே காஞ்சிபுரம் மக்களுக்கு பெரும் குறையாக உள்ளது. அதுவும் காலை நேரத்தில் ரயிலில் செல்வது சவாலான விஷயமாக உள்ளது.
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 5:30, 6:00, 7:20, 8:15 ஆகிய நேரங்களில் மின்சார ரயில் இயக்கப்பட்டாலும், காலை 7:00 மணி முதல், 8:00 மணிக்கு இடையிலான நேரத்தில் கூடுதலாக மின்சார ரயில் இயக்க வேண்டும் என, ரயில் பயணியர் தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றனர்.
ரயில் பெட்டிகளில் கூட்டம் குவிவதால், அமர இருக்கை கிடைக்காமல், கீழே அமர்ந்து ஏராளமானோர் பயணிக்கின்றனர். நிற்க கூட இடமில்லாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
காலை 7:00 மணி முதல், 8:00 மணி இடையிலான நேரத்தில் ஏராளமானோர் சென்னைக்கு செல்கின்றனர். அந்த நேரத்தில் கூடுதல் ரயில் சேவை துவக்க வேண்டும் என, ரயில் பயணியர் தெரிவிக்கின்றனர்.