/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சமத்துவபுரத்தில் நிழற்கூரை சேதம் சீரமைக்க பயணியர் எதிர்பார்ப்பு
/
சமத்துவபுரத்தில் நிழற்கூரை சேதம் சீரமைக்க பயணியர் எதிர்பார்ப்பு
சமத்துவபுரத்தில் நிழற்கூரை சேதம் சீரமைக்க பயணியர் எதிர்பார்ப்பு
சமத்துவபுரத்தில் நிழற்கூரை சேதம் சீரமைக்க பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 24, 2025 01:31 AM

காஞ்சிபுரம்:சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நிழற்கூரை சேதமடைந்து உள்ளதால், அதை சீரமைக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
வெள்ளைகேட் அடுத்த சமத்துவபுரம் கிராமத்தில் இருந்து, துலங்கும் தண்டலம் கிராமம் வழியாக, கூரம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இச்சாலை வழியாக, ஒழுக்கோல்பட்டு, வதியூர், கீழ்வெண்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் வெள்ளைகேட் சமத்துவபுரம் கிராமம் வழியாக காஞ்சிபுரம், பாலுச்செட்டிசத்திரம், சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து வெள்ளைகேட் சமத்துவபுரம், துலங்கும் தண்டலம், கூரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தங்களின் தேவைக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர்.
கிராமப்புற பயணியர் வசதிக்கு ஏற்ப, சாலையோரம் தற்காலிக பயணியர் நிழற்கூரை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பயணியர் நிழற்கூரை சேதம் ஏற்பட்டு, பேருந்திற்கு காத்திருக்கும் பயணியர் ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு, புதிய நிழற்கூரை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.