/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அதிவேக கனரக வாகனங்களால் சாலவாக்கத்தில் பயணியர் அச்சம்
/
அதிவேக கனரக வாகனங்களால் சாலவாக்கத்தில் பயணியர் அச்சம்
அதிவேக கனரக வாகனங்களால் சாலவாக்கத்தில் பயணியர் அச்சம்
அதிவேக கனரக வாகனங்களால் சாலவாக்கத்தில் பயணியர் அச்சம்
ADDED : பிப் 26, 2024 04:51 AM
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சாலவாக்கம். இங்கு அரசினர் மேல்நிலைப் பள்ளி, சார் - பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம் மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலகம், இந்தியன் வங்கி என, மக்கள்பயன்பாட்டுக்கான பொது மையங்கள் பல இயங்குகின்றன.
மேலும், சாலவாக்கம் பஜார் வீதியில் சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இதனால், சாலவாக்கம் சாலையில் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகம் காணப்படுகிறது.
இந்நிலையில், சில நாட்களாக சாலவாக்கம் சாலை வழியாக தனியார் கிரஷர் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
இந்த கனரக வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதாகவும், இதனால் சாலையில் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளதாகவும் அப்பகுதியினர் மற்றும் பயணியர் கூறி வருகின்றனர்.
எனவே, விபத்தை தடுக்கும் வகையில், சாலவாக்கம் சாலையில் அதிவேகமாக இயங்கும் கனரகவாகனங்கள் குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

