/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பஸ் நிற்காத இடத்தில் நிழற்குடை சங்கராபுரம் பயணியர் அதிருப்தி
/
பஸ் நிற்காத இடத்தில் நிழற்குடை சங்கராபுரம் பயணியர் அதிருப்தி
பஸ் நிற்காத இடத்தில் நிழற்குடை சங்கராபுரம் பயணியர் அதிருப்தி
பஸ் நிற்காத இடத்தில் நிழற்குடை சங்கராபுரம் பயணியர் அதிருப்தி
ADDED : மே 29, 2025 12:22 AM

வாலாஜாபாத்சென்னை -- கன்னியாகுமரி தொழிற்தடம் திட்டம் சார்பில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை விரிவாக்க பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இப்பணிக்காக சாலையோரம் இருந்த பயணியர் நிழற்குடை கட்டடங்கள் பல்வேறு பகுதிகளில் அகற்றப்பட்டுள்ளன.
அதன்படி, வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில், புளியம்பாக்கம் அடுத்த, சங்கராபுரம் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்த நிழற்குடை கட்டடம் அகற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது சாலை பணி முடிவுற்ற பேருந்து நிறுத்தங்களில், புதிய பயணியர் நிழற்குடை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சங்கராபுரம் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தத்தில் போதுமான இடவசதி இல்லையென, 300மீ., துார இடைவெளியில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு இருப்பது அப்பகுதியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே சங்கராபுரம் கிராமத்தில் இருந்து, கூட்டுச்சாலை பகுதிக்கு ஒரு கி.மீ., துாரம் நடந்து செல்லும் நிலையில், தற்போது கூடுதல் துாரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாக புலம்புகின்றனர்.
கிராமத்தினரின் விருப்பத்திற்கு மாறாக, அதிகாரிகளின் நடவடிக்கை அதிருப்தி அளிப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.