/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே வழி நில்லா பஸ்களால் பயணியர் தவிப்பு
/
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே வழி நில்லா பஸ்களால் பயணியர் தவிப்பு
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே வழி நில்லா பஸ்களால் பயணியர் தவிப்பு
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே வழி நில்லா பஸ்களால் பயணியர் தவிப்பு
ADDED : மார் 25, 2025 08:01 AM

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் - செங்கல் பட்டு சாலையில், வாலாஜாபாத் அடுத்து, புளியம்பாக்கம், சங்கராபுரம், பழையசீவரம், உள்ளாவூர், மேலச்சேரி, பாலுார், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களை சேர்ந்தோர், காலையில் செங்கல்பட்டுக்கு பேருந்து வாயிலாக பயணித்து, அங்கிருந்து சென்னை புறநகர் பகுதிகளில் பணிபுரிந்து மாலை வீடு திரும்புகின்றனர்.
இந்நிலையில், மாலை நேரத்தில் செங்கல்பட்டில் இருந்து, காஞ்சிபுரம் செல்ல போதுமான பேருந்து வசதி இல்லாததால், இடையிலானகிராமங்களை சேர்ந்தோர் இரவு வரை பேருந்து கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது,
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையிலாக இயக்கப்படும் பேருந்துகளில், தடம் எண்;212பி என்ற அரசு பேருந்து மட்டும் வழி நின்று செல்லும் பேருந்தாக உள்ளது.
இச்சாலை வழியாக திருப்பதி வரை இயக்கப்படும் தடம் எண்212எச், கல்ப்பாக்கம் வரை செல்லும் தடம் எண்;157, ஆகிய அரசு பேருந்துகள் நீண்ட காலமாகவேவழி நில்லா பேருந்து களாக உள்ளது.
வழி நிற்கும், தடம் எண்;212பி அரசு பேருந்தும் குறிப்பிட்டநேரங்களில் மட்டும் இயங்குகிறது.
இதனால், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே தனியார் பேருந்துகளையேஅதிகம் நம்பி பயணிக்கும் நிலை இருந்துவருகிறது.
இந்நிலையில், சில மாதங்களாக செங்கல்பட்டில் இருந்து, காஞ்சிபுரம் இயங்கும் தனியார் பேருந்துகளும், மாலை 4:30 மணிக்கு மேல், இரவு 7:30 மணி வரை தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு, அடாவடித்தனமாக வழி நில்லா பேருந்துகளாக இயக்குகின்றன.
இதனால், பணி முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்கள், அலுவலர்கள், வியாபாரிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அச்சமயம் போக்குவரத்துக்கு அவதிபடும் நிலை உள்ளது.
எனவே, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் இடையே மாலை நேரத்தில் கூடுதல் அரசு பேருந்துகள் தடம் எண்;212பி, இயக்குவதோடு, இத்தடத்தில் இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளையும் எப்போதும் வழி நிறுத்தங்களில் நின்று செல்ல, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.