/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விடியல் பயண பஸ்சால் விடியல் காணாத பயணியர்
/
விடியல் பயண பஸ்சால் விடியல் காணாத பயணியர்
ADDED : ஜூலை 20, 2025 10:25 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூரில், விடியல் பயண பேருந்தை சரியாக இயக்க பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, தடம் எண் டி68சி பேருந்து செங்கல்பட்டுக்கு தினமும் நான்கு நடை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து விடியல் பயண பேருந்து என்பதால், மகளிர் கட்டணம் இல்லாமல் பயணித்து வருகின்றனர். இப்பேருந்தை பயன்படுத்தி சுற்றுவட்டாரத்தில் உள்ள பயணியர் பல்வேறு பணிகள் தொடர்பாக தினமும் செங்கல்பட்டுக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல, செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்தும், உத்திரமேரூருக்கு பயணியர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இப்பேருந்து அமாவாசை, பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில், செங்கல்பட்டுக்கு சரிவர இயக்கப்படுவதில்லை.
அதற்கு பதிலாக சிறப்பு பேருந்தாக வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பயணியர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. விடியல் பயண பேருந்திற்கு பதிலாக, கட்டண பேருந்தை மகளிர் பயன் படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இது குறித்து பயணியர் கூறியதாவது:
உத்திரமேரூரில் இருந்து, செங்கல்பட்டுக்கு தடம் எண் டி68சி, விடியல் பயண பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து விசேஷ நாட்களில் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.விசேஷ நாட்களில் வெளியூர்களுக்கு இயக்க, வேறொரு பேருந்தை இயக்காமல் போக்குவரத்து துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். விடியல் பயண பேருந்தால் எங்களுக்கு விடியல் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.