/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான சாலையில் 'பேட்ச் ஒர்க்' துவக்கம்
/
சேதமான சாலையில் 'பேட்ச் ஒர்க்' துவக்கம்
ADDED : நவ 13, 2025 11:53 PM

ஸ்ரீபெரும்புதுார்: சமீபத்தில் பெய்த மழையால் சேதமான, ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையை, நெடுஞ்சாலைத் துறையினர், 'பேட்ச் ஒர்க்' பணியாக தார், ஜல்லி கலவை மூலம் சீரமைத்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை வழியாக ஒரகடம், வல்லம் வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், நாள்தோறும் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலை, சமீபத்தில் பெய்த மழையால், பல்வேறு இடங்களில் சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறிவிட்டது.
இதனால், இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக, வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையின் ஸ்ரீபெரும்புதுார் உட்கோட்ட அதிகாரிகள், ஒரகடம் முதல் ஸ்ரீபெரும்புதுார் வரை உள்ள 12 கி.மீ., சாலையின் இருபுறமும் உள்ள பள்ளங்களை 'பேட்ச் ஒர்க்' பணியாக, தார் கலவை கொட்டி சீரமைத்து வருகின்றனர். சில நாட்களில் சீரமைப்பு பணிகள் முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

