sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தலில் இவிஎம் பயன்படுத்த கர்நாடகாவில் 85% மக்கள் நம்பிக்கை; ராகுலை விளாசிய பாஜ

/

தேர்தலில் இவிஎம் பயன்படுத்த கர்நாடகாவில் 85% மக்கள் நம்பிக்கை; ராகுலை விளாசிய பாஜ

தேர்தலில் இவிஎம் பயன்படுத்த கர்நாடகாவில் 85% மக்கள் நம்பிக்கை; ராகுலை விளாசிய பாஜ

தேர்தலில் இவிஎம் பயன்படுத்த கர்நாடகாவில் 85% மக்கள் நம்பிக்கை; ராகுலை விளாசிய பாஜ

9


ADDED : ஜன 02, 2026 04:51 PM

Google News

9

ADDED : ஜன 02, 2026 04:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில் 2024 லோக்சபா தேர்தலின் போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு 85 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளது, ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. இது காங்கிரசின் முகத்தில் விழுந்த அறை என்று பாஜ விமர்சித்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தல்கள் 2024 குடிமக்களின் அறிவு, அணுகுமுறை மற்றும் நடைமுறை பற்றிய மதிப்பீடு என்ற தலைப்பில் ஆய்வின் ஒரு பகுதியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் 34 மாவட்டங்களை உள்ளடக்கிய 102 சட்டசபை தொகுதிகிளில் 5100 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், 83.61 சதவீதம் பேர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் நம்பகமானது என்று கூறி இருக்கின்றனர். ஒட்டு மொத்தமாக, 69.39 சதவீதம் பேர் இந்த இயந்திரங்கள் துல்லியமான முடிவுகளை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு, பெலகாவி, கலபுராகி, மைசூரு ஆகிய மண்டலங்களில் உள்ள மக்களிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவர்களில் கலபுராகி பகுதியில் 83.24 சதவீதம் பேர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் நம்பகமானது என்று தெரிவித்துள்ளனர். இதுவே மைசூருவில் 70.67 சதவீதம், பெலகாவியில் 63.90 சதவீதம், பெங்களூருவில் 63.67 சதவீதம் பேர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி, ராகுலை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஷெசாத் பூனம்வாலா கூறுகையில், கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேச தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது தேர்தல் கமிஷன் மீது எவ்வித புகாரும் கூறாதவரும் இதே ராகுல்தான். தேர்தலில் தோற்கும் போது தேர்தல் கமிஷனை குற்றம் சொல்கிறார்.

அவரிடம் தான் பிரச்னை உள்ளது, தரவுகளில் அல்ல. அதை ஏற்றுக் கொள்ளாமல் ஒரு மாயையில் வாழ்கிறார் என்றார்.

கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறுகையில், நாடு முழுவதும் பயணித்து, நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று கதை சொன்னவர் ராகுல். இப்போது கர்நாடகா ஆய்வுகள் வித்தியாசமான கதையை சொல்லி இருக்கிறது. மக்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை நம்புகின்றனர். காங்கிரசின் கண்டுபிடிப்பு, அக்கட்சியின் முகத்தில் விழுந்த ஓர் அறை என்று கூறினார்.






      Dinamalar
      Follow us