/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தீக்காய தீவிர சிகிச்சை வசதியின்றி நோயாளிகள்...திண்டாட்டம்: 80 கி.மீ., பயணித்து கீழ்ப்பாக்கம் செல்லும் அவலம்
/
தீக்காய தீவிர சிகிச்சை வசதியின்றி நோயாளிகள்...திண்டாட்டம்: 80 கி.மீ., பயணித்து கீழ்ப்பாக்கம் செல்லும் அவலம்
தீக்காய தீவிர சிகிச்சை வசதியின்றி நோயாளிகள்...திண்டாட்டம்: 80 கி.மீ., பயணித்து கீழ்ப்பாக்கம் செல்லும் அவலம்
தீக்காய தீவிர சிகிச்சை வசதியின்றி நோயாளிகள்...திண்டாட்டம்: 80 கி.மீ., பயணித்து கீழ்ப்பாக்கம் செல்லும் அவலம்
ADDED : ஆக 28, 2025 01:37 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் தீக்காய தீவிர சிகிச்சை பிரிவு இல்லாததால், பாதிக்கப்படுவோர் 80 கி.மீ., வலியுடன் பயணித்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற வேண்டிய அவலநிலை தொடர்கிறது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ரயில்வே சாலையில் இயங்கி வருகிறது. இங்கு கர்ப்பிணியருக்கு பிரசவம் பார்ப்பது, பச்சிளம் குழந்தைகளுக்கான 24 மணி நேர சிகிச்சை, இதயம், காது, மூக்கு, தொண்டை, பொது மருத்துவம், அவசர சிகிச்சை, எலும்பு, அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் 3,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இருப்பினும், மருத்துவமனையில் நடைபெறும் பல்வேறு சேவை குறைபாடுகளால், அன்றாடம் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். தீவிர சிகிச்சைக்கான வார்டுகள் இல்லாததால், சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அலைய வேண்டியுள்ளதாக நோயாளிகள் புலம்புகின்றனர்.
குறிப்பாக, தீக்காயத்துக்கான தீ விர சிகிச்சை பிரிவு இல்லாததால், அதிக தீக்காயங்களுடன் வரும் நோயாளிகள், 80 கி.மீ., வலியுடன் பயணித்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு செல்லும் கட்டாயம் ஏற்படுகிறது.
கடந்த 2022 செப்., மாதம், தேவேரியம்பாக்கம் கிராமத்தில் காஸ் கிடங்கு வெடித்த சம்பவத்தில், 11 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல, 2023ல் காஞ்சிபுரம் அருகேயுள்ள குருவிமலை கிராமத்தில், வெடி தயாரிப்பு இடத்தில் நடந்த விபத்தில், ஒன்பது பேர் இறந்தனர்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீக்காயத்திற்கான தீவிர சிகிச்சைக்கா ன வார்டு இல்லாததால், 80 கி.மீ., துாரம் தீக்காயத்துடன் நோயாளி பயணிக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. காஞ்சி புரத்தில் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட அனைவரும் நீண்ட துாரம் சென்றிருக்க மாட்டார்கள்; உயிரிழப்புகளையும் தடுத்திருக்கலாம்; பலரை காப்பாற்றியிருக்க முடியும்.
மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இருக்க வேண்டிய அடிப்படை பணியிடங்கள்கூட இன்னும் முழுமை பெறாமல் உள்ளது.
உதாரணமா க, சிறுநீரக பிரிவு, சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு போன்ற மிக முக்கிய சிகிச்சைகளுக்கு இங்கு சிறப்பு மருத்துவர்கள் இல்லை.
சிறுநீரக பிரிவுக்கும், சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவுக்கு ம், வாரத்தில் இரண்டு நாட்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வந்து செல்கின்றனர். சிறுநீரக பிரிவுக்கு தனி வார்டும் இல்லை.
இம்மருத்துவமனையில் முக்கிய உறுப்புகளுக்கு தேவையான மருத்துவர்களை கூட பல ஆண்டுகளாக நியமிக்காமல், தமிழக சுகாதாரத்துறை அலட்சியமாக இருந்து வருகிறது.
தி.மு. க., சார்பில், 2021ல் சட்டசபை தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
அதில், மாவட்ட வாரியா ன தேர்தல் வாக்குறுதிகளில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்; புதிய மருத்துவக் கல்லுாரி திறக்கப்படும் என, 2021 சட்டசபை தேர்தலின்போது தி.மு.க., வாக்குறுதி அளித்தது.
ஆட்சிக்கு வந்த பின், வாக்குறுதியை ஆட்சி யாளர்கள் மறந்து விட்டனர்.
மருத்துவமனையை தரம் உயர்த்தவும் இல்லை; புதிய மருத்துவக் கல்லுாரிக்கான அறிவிப்பும்கூட வரவில்லை.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவம னை, 100 ஆண்டுகளுக்கு மேல் இயங்குகிறது.
இங்கு, தீக்காயங்களுக்கான தீ விர சிகிச்சை பிரிவு துவக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும் வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும் என, காஞ்சிபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.