/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேர்க்கடலை சாகுபடி பணி மும்முரம்
/
வேர்க்கடலை சாகுபடி பணி மும்முரம்
ADDED : டிச 24, 2024 12:33 AM

உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய ஒன்றிய கிராமங்களில், ஏரி பாசனம் மற்றும் ஆற்று பாசனம் வாயிலாக பயிரிடும் விவசாயிகள், வேர்க்கடலை சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பினாயூர், சீட்டணஞ்சேரி, காவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள், பாலாறு மற்றும் செய்யாற்று படுகையை ஒட்டியுள்ளன. இப்பகுதிகளில் உள்ள புன்செய் நிலங்களில், பின்பட்ட சாகுபடிக்கு வேர்க்கடலை பயிரிடுவதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பினாயூர் கிராம விவசாயிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டிலும் இந்த பருவத்திற்கு வேர்க்கடலை சாகுபடி செய்தோம். செடிகளில் நன்றாக காய்பிடித்து அதிக மகசூல் கிடைத்தது.
இதனால், இந்த ஆண்டுக்கான பின்பட்டா சம்பா பருவத்திற்கும் வேர்க்கடலை தேர்வு செய்து சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளோம். அடுத்த நவரை மற்றும் சொர்ணவாரி பட்டத்திற்கு நெல் அல்லது வேறு சாகுபடி என, மாறி மாறி பயிரிடுவதால், அனைத்து பருவத்திலும் நல்ல லாபம் ஈட்ட முடிகிறது.
இவ்வாறு கூறினர்.