/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு பஸ்களில் கட்டண சலுகை ஓய்வூதியர் சங்கத்தினர் தீர்மானம்
/
அரசு பஸ்களில் கட்டண சலுகை ஓய்வூதியர் சங்கத்தினர் தீர்மானம்
அரசு பஸ்களில் கட்டண சலுகை ஓய்வூதியர் சங்கத்தினர் தீர்மானம்
அரசு பஸ்களில் கட்டண சலுகை ஓய்வூதியர் சங்கத்தினர் தீர்மானம்
ADDED : ஜன 26, 2025 08:04 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க ஆண்டு விழா மற்றும் ஓய்வூதியர் தின விழா, மாவட்ட தலைவர் காளத்தி தலைமையில் நேற்று நடந்தது. மாநில மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலுார் மாவட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சிபுரம் எஸ்.பி.ஐ., வங்கி முதன்மை மேலாளர் மணிகண்டன் சங்கரன், ஓய்வூதியருக்களுக்கான வங்கியின் திட்டங்களை எடுத்து கூறினார்.
இதில், அங்கன்வாடி ஊட்டச்சத்து பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். மருத்துவப்படியை 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டண சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை நிறைவேற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.