/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி
/
மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி
மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி
மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி
ADDED : செப் 18, 2025 02:07 AM

ஸ்ரீபெரும்புதுார், செப். 18-
ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், பட்டுநுால்சத்திரம் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளை சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் அவதிபடுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டு, பட்டுநுால்சத்திரம் விநாயகர் கோவில் தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாயில் இருந்து, மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளில் சூழ்ந்தது.
வீடுகளின் முன் தேங்கி நின்ற கழிவுநீரால் அப்பகுதி மக்கள் அவதிபடுகின்றனர். மேலும், சுகாதார சீர்கேடு, நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாய் முறையாக துார்வாராமல் துார்ந்து உள்ளது. அதேபோல, மழைநீர் வடிகால் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால், ஒவ்வொரு மழையின் போதும், மழைநீர் வடிகால்வாயில் இருந்து கழிவுநீர், மழைநீருடன் கலந்து, குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகிறது. எனவே, மழைநீர் வடிகால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் சீராக வெளியேற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து 14வது வார்டு உறுப்பினர் சுதாகர் கூறுகையில், ''ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளோம். ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீர் வடிகால்வாய் விரைவில் சீரமைக்கப்படும்,'' என்றார்.