/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பி.டி.ஓ., அலுவலக நுழைவாயில் சேதம் விரைவில் சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
பி.டி.ஓ., அலுவலக நுழைவாயில் சேதம் விரைவில் சீரமைக்க மக்கள் கோரிக்கை
பி.டி.ஓ., அலுவலக நுழைவாயில் சேதம் விரைவில் சீரமைக்க மக்கள் கோரிக்கை
பி.டி.ஓ., அலுவலக நுழைவாயில் சேதம் விரைவில் சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : நவ 12, 2025 10:42 PM

ஸ்ரீபெரும்புதுார்: கடந்த மாதம் சிமென்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி மோதியதில் சேதமடைந்த, ஸ்ரீபெரும்புதுார் பி.டி.ஓ., அலுவலக நுழைவாயிலை, விரைவில் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் சாலையில், பட்டுநுால்சத்திரம் பகுதியில், ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட 58 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள், நாள்தோறும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் தேவைக்காக இங்கு வந்து செல்கின்றனர்.
இதே வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., அலுவலகம், ஸ்ரீபெரும்புதுார் கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த மாதம் அரியலுாரில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சிமென்ட் கிடங்கிற்கு, சிமென்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவாயிலில் மோதி விபத்துக்கு உள்ளானது.
இதில், நுழைவாயில் இரும்பு கேட், சுற்றுச்சுவர் உள்ளிட்டவை இடிந்து விழுந்து சேதமானது. இதையடுத்து, தற்போது வரை நுழைவாயில் சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், இரவு நேரங்களில் அத்துமீறி நுழையும் மர்ம நபர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
தவிர, வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பி மற்றும் சிமென்ட் மூட்டைகளை திருடி செல்லும் சூழல் உள்ளது.
எனவே, சேதமடைந்துள்ள பி.டி.ஓ., அலுவலக நுழைவாயிலை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்ரீபெரும்புதுார் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

