/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு இல்லாத குளங்களால் விபத்து அபாயம்
/
தடுப்பு இல்லாத குளங்களால் விபத்து அபாயம்
ADDED : நவ 12, 2025 10:41 PM

காஞ்சிபுரம்: தடுப்பு இல்லாத சாலையோர குளங்களால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
மதுரமங்கலம் அடுத்த, கண்ணன்தாங்கல் கிராமத்தில் இருந்து, குணகரம்பாக்கம் கிராமம் வழியாக, எடையார்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலை செல்கிறது.
இந்த சாலை வழியாக, சுங்குவார்சத்திரம் பகுதியில் இருந்து, குணகரம்பாக்கம் கிராமம் வழியாக, செல்லம்பட்டிடை, எடையார்பாக்கம், கோட்டூர், கப்பான்கோட்டூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வாகனங்களில் செல்கின்றனர்.
இந்த சாலையோரம், மகாதேவிமங்கலம் அருகே இரண்டு குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் ஓரம் தடுப்பு ஏதுவும் இல்லை.
இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும், அந்த சாலை வழியாக மின் விளக்கு வசதி இல்லாததால், சைக்கிளில் செல்வோர் நிலை தடுமாறி கவிழும் நிலை உள்ளது.
எனவே, மகாதேவிமங்கலம் சாலையோர குளங்களுக்கு தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

