/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிப்பறை மின்மோட்டார் பழுது சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
கழிப்பறை மின்மோட்டார் பழுது சீரமைக்க மக்கள் கோரிக்கை
கழிப்பறை மின்மோட்டார் பழுது சீரமைக்க மக்கள் கோரிக்கை
கழிப்பறை மின்மோட்டார் பழுது சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 06, 2025 02:17 AM

புத்தேரி, :பொது கழிப்பறையின் தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாயின் மின் மோட்டார் பழுதை சீரமைக்க வேண்டும் என, பாக்குபேட்டை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, பாக்கு பேட்டையில் உள்ள பொது கழிப்பறையை, கிராமத்தினர் பயன் படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கழிப்பறையின் தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாயின் மின் மோட்டார், கடந்த வாரம் பழுதடைந்தது.
பழுதடைந்த மின் மோட்டாரை, ஊராட்சி நிர்வாகம் சீரமைக்காததால் குழாய்களில் தண்ணீர் வராமல், கழிப்பறையை பயன்படுத்த முடியாமல், பாக்குபேட்டை கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, புத்தேரி ஊராட்சி தலைவர் அப்பன் கூறுகையில், ''பாக்குபேட்டையில் உள்ள கழிப்பறை கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
''கட்டடம் சிதிலமடைந்து வருவதால், நவீன கழிப்பறை கட்டடம் கட்டுவதற்கு காஞ்சிபுரம் ஒன்றிய தலைவரிடம் அனுமதி கேட்டுள்ளேன். அனுமதி கிடைத்தவுடன் புதிய கழிப்பறை கட்டடம் கட்டப்படும்,'' என்றார்.