/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உடைந்த குடிநீர் தொட்டியை மாற்ற பெரியாநத்தம் மக்கள் வலியுறுத்தல்
/
உடைந்த குடிநீர் தொட்டியை மாற்ற பெரியாநத்தம் மக்கள் வலியுறுத்தல்
உடைந்த குடிநீர் தொட்டியை மாற்ற பெரியாநத்தம் மக்கள் வலியுறுத்தல்
உடைந்த குடிநீர் தொட்டியை மாற்ற பெரியாநத்தம் மக்கள் வலியுறுத்தல்
ADDED : நவ 03, 2025 01:08 AM

காஞ்சிபுரம்: பெரியாநத்தம் கிராமத்தில், உடைந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை மாற்றி, புதிய தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், காலுார் ஊராட்சி, பெரியாநத்தம் கிராமம், எல்லையம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்களின் கூடுதல் குடிநீர் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தொட்டியின் மேற்பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால், தொட்டியின் அருகில் உள்ள முருங்கை மரத்தின் இலைகள், புழு, பூச்சிகள் விழுந்து, தொட்டியில் குடிநீர் மாசடைந்து உள்ளது.
எனவே, உடைந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என, பெரியாநத்தம் எல்லையம்மன் கோவில் தெரு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
பெரியாநத்தம் எல்லையம்மன் கோவில் தெருவில், குடிநீர் தொட்டி உடைந்தது தொடர்பாக எந்தவித புகாரும் வரவில்லை. உடைந்த குடிநீர் தொட்டிக்கு மாற்றாக, புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

