/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கட்டவாக்கத்தில் டாஸ்மாக் கடை அமைக்க மக்கள் எதிர்ப்பு
/
கட்டவாக்கத்தில் டாஸ்மாக் கடை அமைக்க மக்கள் எதிர்ப்பு
கட்டவாக்கத்தில் டாஸ்மாக் கடை அமைக்க மக்கள் எதிர்ப்பு
கட்டவாக்கத்தில் டாஸ்மாக் கடை அமைக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 30, 2025 11:03 PM
வாலாஜாபாத்:கட்டவாக்கத்தில் புதியதாக அரசு மதுபானக்கடை அமைக்க அப்பகுதியில் வசிப்போர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், கட்டவாக்கம் கிராமத்தில், விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில், இப்பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கு தடை விதிக்க அக்கிராமத்தில் வசிப்போர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, கட்ட வாக்கம் கிராமத்தில் வசிப்போர் கூறியதாவது,
கட்டவாக்கம் மதநல்லிணக்க ஊராட்சியாக அரசால் தேர்வு செய்யப்பட்டு பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய பகுதியில் டாஸ்மாக் கடை இயக்குவதை அனுமதிக்கக்கூடாது.
மேலும், கட்டவாக்கத்தில் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் 15,000 டன் அளவிற்கு நெல் சேமிக்கும் வகையிலான ஐந்து சேமிப்பு தளங்கள், சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது.
அந்த நெல் சேமிப்பு கிடங்கிற்கு அருகாமையில்தான் தற்போது அரசு டாஸ்மாக் கடை இயக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இங்கு மது பிரியர்களின் புகை பயன்பாடு போன்றவையால் நெல் சேமிப்பு தளங்களில் தீ விபத்து போன்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, கட்டவாக்கத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான நடவடிக்கையை கைவிட, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்,
இவ்வாறு அவர்கள் கூறினர்.

