/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொடர் மின் வெட்டால் கருக்குப்பேட்டையில் மக்கள் மறியல்
/
தொடர் மின் வெட்டால் கருக்குப்பேட்டையில் மக்கள் மறியல்
தொடர் மின் வெட்டால் கருக்குப்பேட்டையில் மக்கள் மறியல்
தொடர் மின் வெட்டால் கருக்குப்பேட்டையில் மக்கள் மறியல்
ADDED : ஜூன் 20, 2025 01:32 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மின் சாதனங்கள் பராமரிப்பு பணி காரணமாக, சனி, புதன் போன்ற வார நாட்களில் மின்வெட்டு ஏற்படும். மின்வெட்டு பற்றியும் முன்கூட்டியே அறிவிக்கப்படும். ஆனால், சமீப நாட்களாக, இரவு, பகல் என, அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதால், கிராம, நகரவாசிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில், மின்சாரம் விட்டு விட்டு வருவதால், குழந்தைகள், நோயாளிகளால் துாங்க முடியவில்லை என, புகார் தெரிவிக்கின்றனர். மின்வாரிய அதிகாரிகளிடம் மக்கள் மொபைல்போனில் அழைத்து கேட்டாலும், முறையான பதில் தெரிவிப்பதில்லை என, மின்வாரியம் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஏற்கனவே குறைவான மின்னழுத்தம் பிரச்னை இப்பகுதியில் உள்ளது.
இந்நிலையில் வாலாஜாபாத் அருகே உள்ள கருக்குப்பேட்டையில், பல மணி நேரமாக, நேற்று முன்தினம் இரவு மின்வெட்டு ஏற்பட்டதால், இரவு 10:30 மணியளவில், கிராம மக்கள் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், மறியல் செய்தனர். போலீசாரின் பேச்சுக்கு பின், இரவு 11:30 மணிக்கு மின் சப்ளை வந்தது. அதன் பின், கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வாலாஜாபாத் சுற்றியுள்ள கிராமப்புறங்கள் மட்டுமல்லாமல், காஞ்சிபுரம் நகர்ப்பகுதியிலும் இரவு நேரத்தில் விட்டு, விட்டு மின்தடை ஏற்படுகிறது.
சமீப நாட்களாக, பிள்ளையார்பாளையம், பெரிய காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில், இரவு நேரத்தில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.