/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் தேங்கும் கழிவுநீரை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
/
கால்வாயில் தேங்கும் கழிவுநீரை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
கால்வாயில் தேங்கும் கழிவுநீரை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
கால்வாயில் தேங்கும் கழிவுநீரை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 30, 2025 01:36 AM

வாலாஜாபாத்;வாலாஜாபாத், பஜார் வீதி குறுக்கு தெரு கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத் பேரூராட்சி, 12வது வார்டில் பஜார் வீதி குறுக்கு தெரு உள்ளது. இத்தெருவின் இணைப்பு பகுதியில் உள்ள கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால் தொற்று நோய் அபாயம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கால்வாய் பகுதியில் உள்ள கான்கிரீட் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதால், வாகன பயன்பாட்டிற்கு லாயக்கற்றதாக உள்ளது.
எனவே, பஜார் வீதி குறுக்குத்தெரு கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதோடு, கால்வாய் இணைப்பு பகுதியில் சிறுபாலம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.