/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
களியனுாரில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம்
/
களியனுாரில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம்
ADDED : ஜன 07, 2024 12:36 AM
வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ், இம்மாத துவக்க முதல், பல்வேறு இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, வாலாஜாபாத் ஒன்றியம், களியனுார் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்தது.
களியனுார் ஊராட்சி தலைவர் வடிவுக்கரசி தலைமையில் நடந்த இம்முகாமில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கிராமங்களில், அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பொதுமக்களுக்கான சலுகைகள் குறித்து அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கினர்.
புதிய மின் இணைப்பு, மின் இணைப்பில் பெயர் மாற்றம், குடும்ப அட்டை பெயர் மாற்றம், வருமான சான்று, ஜாதி சான்று உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டன.
அம்மனுக்கள் கணினி வாயிலாக பதிவு செய்யப்பட்டதோடு, சிலவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.