/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மக்கள் குறைதீர் திட்ட முகாம் ஓ.பி., அடிக்கும் அதிகாரிகள்
/
மக்கள் குறைதீர் திட்ட முகாம் ஓ.பி., அடிக்கும் அதிகாரிகள்
மக்கள் குறைதீர் திட்ட முகாம் ஓ.பி., அடிக்கும் அதிகாரிகள்
மக்கள் குறைதீர் திட்ட முகாம் ஓ.பி., அடிக்கும் அதிகாரிகள்
ADDED : டிச 26, 2024 12:56 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய், நீர்வளம், ஊரக வளர்ச்சி, வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன. வாரந்தோறும் கலெக்டர் தலைமையில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் ஆய்வு கூட்டமும் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்திற்கு மாதத்தின் துவக்க வாரத்தில், துறை சார்ந்த உயரதிகாரி என, அழைக்கப் படும் முதல்நிலை அலுவ லர் பங்கேற்க வேண்டும். இரண்டாவது வாரத்தில், இரண்டாம் நிலை அலுவலரும், மூன்றாவது வாரத்தில் மூன்றாம் நிலை அலுவலர், நான்காவது வாரத்தில் உதவியாளர் அந்தஸ்தில் பணிபுரியும் துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்கலாம்.
பெரும்பாலான மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களுக்கு, உயரதிகாரிகளே சென்று விடுகின்றனர். கூட்டம் முடிந்த பின், பணிபுரியும் அலுவலகத்திற்கு வருவதில்லை. சொந்த வேலையை கவனிக்க சென்று விடுன்றனர்.
இதனால், அரசு துறை சார்ந்த அதிகாரியை சந்திக்க காத்திருக்கும் போது, மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, உத்திரமேரூர், வாலாஜாபாத் தாலுகாவைச் சேர்ந்த அதிகாரிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று, வீட்டிற்கு சென்று விடுகின்றனர்.
ஒரு கையெழுத்து பெற நீண்ட நேரமாக சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் காத்திருக்க வேண்டிய அவலநிலை நீடிக்கிறது. எனவே, அவரவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நாட்களில், முறையாக கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். மற்ற வாரங்களில் மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

