/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீட்டுமனை பட்டா கேட்டு தேவரியம்பாக்கத்தினர் மனு
/
வீட்டுமனை பட்டா கேட்டு தேவரியம்பாக்கத்தினர் மனு
ADDED : மார் 05, 2024 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவரியம்பாக்கம் :வீட்டுமனை பட்டா கேட்டு, தேவரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் நேற்று காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் கலெக்டர்கலைச்செல்வியிடம், தேவரியம்பாக்கம் கிராம பெண்கள் தனித்தனியான மனுவில் கூறியதாவது:
தேவரியம்பாக்கம் ஊராட்சியில், ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பலர் ஏழ்மை நிலையில் வசித்து வருகிறோம்.
எங்களுக்கு சொந்தமான நிலம் மற்றும் வீட்டு மனை பட்டாக்கள் எதுவும் கிடையாது. அரசு ஒதுக்கீடு செய்து கொடுக்கும், இலவசவீட்டுமனை பட்டாக்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

