/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பகுதி நேர ரேஷன் கடை ஏற்படுத்த கோரி மனு
/
பகுதி நேர ரேஷன் கடை ஏற்படுத்த கோரி மனு
ADDED : செப் 18, 2024 08:35 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்த அஞ்சூரான் என்பவர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்தார்.
மனு விபரம்:
வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசி கிராம காலனி பகுதியில், 224 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இப்பகுதியினர், பொது வினிநியோக திட்டத்தின்கீழ் ரேஷன் கடையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை பெற 2 கி.மீ., தூரத்தில் உள்ள வாரணவாசி கிராம ரேஷன் கடைக்கு செல்லும் நிலை உள்ளது.
இதனால், அப்பகுதி முதியோர் ரேஷன் கடைக்கு எளிதாக சென்று வர முடியாது நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களிலும், ஆட்டோ வாயிலாககவும், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஏற்றி வருகின்றனர்.
வெயில் மற்றும் காற்று, மழை நேரங்களில் ரேஷன் கடைக்கு சென்று வருவது சிரமம் இருந்து வருகிறது.
எனவே, வாரணவாசி காலனி பகுதியில், பகுதி நேர ரேஷன் கடை ஏற்படுத்தி, ரேஷன் பொருட்கள் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

