/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பங்குனி உத்திர திருக்கல்யாண விழா கோவிலுக்கு உள்ளே நடத்தக்கோரி மனு
/
பங்குனி உத்திர திருக்கல்யாண விழா கோவிலுக்கு உள்ளே நடத்தக்கோரி மனு
பங்குனி உத்திர திருக்கல்யாண விழா கோவிலுக்கு உள்ளே நடத்தக்கோரி மனு
பங்குனி உத்திர திருக்கல்யாண விழா கோவிலுக்கு உள்ளே நடத்தக்கோரி மனு
ADDED : மார் 07, 2024 12:27 AM
காஞ்சிபுரம்:காஞ்சி ஏகாம்பர நாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழா கோவிலுக்கு உள்ளே நடத்த கோரி மனு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பாலாலயம் நடந்துள்ளதால், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவத்தை, கோவிலுக்கு உள்ளேயே நடத்தக் கோரி, தமிழ்நாடு அனைத்து திருக்கோவில் பக்தர்கள் நல கூட்டமைப்பின் நிறுவன தலைவர் ராஜசேகரன், ஹிந்து சமய ஆணையருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த பிப்., 11ல் ரிஷி கோபுரம் முதலான பரிவார மூர்த்திகளுக்கு இரண்டாம் கட்ட பாலாலயம் நடந்தது.
இந்நிலையில், நாங்கள் ஏற்கனவே, பிப்., 8ல், பங்குனி உத்திர திருவிழாவிற்கு பின் இரண்டாம் கட்ட பாலாலயம் செய்து கொள்ளலாம். அவ்வாறு செய்தால், 2024 பங்குனி உத்திர திருவிழா தடைபடாது.
ஆகம விரோதமாகவும்ஆகாது என்றும், நம் கோவிலில் பின்பற்றி வரும் ஸ்ரீமத் காமிகாகம வாக்கியங்களை சுட்டிக்காட்டி தெரிவித்திருந்தோம். எனினும் இரண்டாம் கட்ட பாலாலயம் நடந்தது.
ரிஷிகோபுர பாலாலயம் நடைபெற்றாலும், கொடியேற்றத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
அபிஷேகமும் உள்புறப்பாடும் அவசியம் நடைபெறும் என உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது கொடியேற்றம் முதலானது நடைபெறாது எனவும், ஆஸ்தானத்திலேயே அபிஷேகம் மட்டும் நடைபெறுவதாக கேள்வியுறுகிறோம். இது முற்றிலும் தவறான ஆகம விரோதப் போக்கு.
எனவே, கோவிலுக்குள்ளேயே பங்குனி உத்திர திருவிழாவை நடத்த ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

