ADDED : பிப் 12, 2025 08:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், துாய்மை பணியாளர்கள் சங்கத்தினர், நூதன முறையில் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள் உள்ளன. இங்கு பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, 2020 - -24ம் ஆண்டு வரை ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்கவில்லை என, நேற்று துாய்மை பணியாளர்கள், தேசியக்கொடி ஏந்தி தாம்புல தட்டுடன் மனு அளித்தனர்.
இதில், வாலாஜாபாத் ஒன்றியத்தைச் சேர்ந்த துாய்மை பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

