/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீரான மின்சாரம் குறைதீர் கூட்டத்தில் மனு
/
சீரான மின்சாரம் குறைதீர் கூட்டத்தில் மனு
ADDED : செப் 26, 2024 08:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், மாதந்தோறும் நான்காவது வியாழக்கிழமையன்று, தெற்கு கோட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை, அண்ணா மாளிகையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் தெற்கு கோட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம், மேற்பார்வை பொறியாளர் கண்ணன் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், நுகர்வோரிடமிருந்து களியனுாரில் சீரான மின்சாரம், வீட்டு மின் இணைப்பு, விவசாய மின் இணைப்பு உள்ளிட்ட 6 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.