/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாலுகா அலுவலகங்களில் நடத்த மனு
/
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாலுகா அலுவலகங்களில் நடத்த மனு
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாலுகா அலுவலகங்களில் நடத்த மனு
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாலுகா அலுவலகங்களில் நடத்த மனு
ADDED : அக் 14, 2025 12:59 AM
உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தக்கோரி, கலெக்டர் கலைச்செல்வியிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் கலைச்செல்வியிடம், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், உத்திரமேரூர் வட்ட தலைவர் சீனிவாசன் தலைமையிலான விவசாயிகள் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
மனு விபரம்:
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வருகின்றனர்.
அதில், பெரும்பாலான விவசாயிகள் நீண்ட துாரம் பயணித்து காஞ்சிபுரம் கூட்டத்திற்கு வர முடியாத சூழல் உள்ளது.
திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், தாலுகா அலுவலகங்களில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.
அது போல, நம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய தாலுகா அலுவலகங்களில், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.