/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காவணிப்பாக்கத்தில் முறைகேடான பட்டா வழங்குதலை தடுக்க கோரி மனு
/
காவணிப்பாக்கத்தில் முறைகேடான பட்டா வழங்குதலை தடுக்க கோரி மனு
காவணிப்பாக்கத்தில் முறைகேடான பட்டா வழங்குதலை தடுக்க கோரி மனு
காவணிப்பாக்கத்தில் முறைகேடான பட்டா வழங்குதலை தடுக்க கோரி மனு
ADDED : நவ 23, 2025 01:46 AM
காவணிப்பாக்கம்: உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊரா ட்சிக்கு உட்பட்ட காவணிப்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தி முன்னிலையில், அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசனிடம் மனு அளித்துள்ளார்.
மனு விபரம்;
காவணிப்பாக்கம் கிராமத்தில், 2001ல், ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 80 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீட்டுமனை பட்டா (நிலத்தை ஒப்படை செய்வதாக பிறப்பிக்கப்படும் உத்தரவின் ஆணை) வழங்கப்பட்டது.
மனை பட்டா வழங்கப்பட்ட அந்த சொத்துக்களை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்து, சர்வே எண் குறித்த விபரங்களை இணையதளத்தில் சேர்த்து ஆன்லைன் பட்டா வழங்க கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளிடத்தில் தொ டர்ந்து மனுக்கள் அளித்து வந்தோம்.
இந்நிலையில், வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ள அந்த இடத்தினை சொத்திற்கு எந்தவித உரிமையும் இல்லாத வேறு சில நபர்க ளுக்கு தற்போது பட்டா வழங்கி கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள் ளது.
எனவே, காவணிப்பாக்கத்தில் ஏற்கனவே மனைபட்டா ஒப்படை செய்த இடங்களை வேறு நபர்களுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கையை தடுத்து, ஏற்கனவே வீட்டுமனை வழங்கிய அதே பயனாளிகளுக்கு ஆன் லைன் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

