/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் கொள்முதல் நிலையம் காட்டாங்குளத்தில் அமைக்க மனு
/
நெல் கொள்முதல் நிலையம் காட்டாங்குளத்தில் அமைக்க மனு
நெல் கொள்முதல் நிலையம் காட்டாங்குளத்தில் அமைக்க மனு
நெல் கொள்முதல் நிலையம் காட்டாங்குளத்தில் அமைக்க மனு
ADDED : பிப் 13, 2024 04:10 AM
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சி தலைவர் செல்வக்குமரன் தலைமையிலான அப்பகுதி விவசாயிகள், நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மனு விபரம்:
உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் கிராமத்தை சுற்றி படூர், மலையாங்குளம், அமராவதிபட்டணம், மல்லிகாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், அதிக அளவில் நெல் பயிரிட்டு வருகின்றனர்.
இவர்கள் விளைவிக்கும் நெல்லை விற்பனை செய்ய ஏதுவாக, காட்டாங்குளத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்த வேண்டும்.
சம்பா பருவ சாகுபடிக்கான நெல் பயிர்கள் வரும் மார்ச் மாதத்தில் அறுவடை செய்ய உள்ளதால் மார்ச் மாத இறுதியில் இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.