/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் சுவர் இடிப்பு எஸ்.பி.,யிடம் மனு
/
கோவில் சுவர் இடிப்பு எஸ்.பி.,யிடம் மனு
ADDED : பிப் 15, 2024 01:54 AM
காஞ்சிபுரம்,:செவிலிமேட்டில் கோவில் இட பாதுகாப்பு சுவரை இடித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, அப்பகுதியினர் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., சண்முகத்திடம் நேற்று மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில், தெற்கு மாட வீதியில், சர்வே எண். 985/9ல், மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது.
கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில், அருகில் வசிப்போர் ஆக்கிரமித்திருந்தனர். அவற்றை, வருவாய் துறையினர் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.
எங்கள் பகுதிவாசிகள் இணைந்து, கோவில் இடத்தின் பாதுகாப்புக்காக 7 அடி உயரத்தில் மதில்சுவர் அமைக்கப்பட்டது. ஆனால், அருகில் வசிக்கும் நான்கு பேர், மதில் சுவரை இடித்து விட்டனர்.
இதுதொடர்பாக, காஞ்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், சுவரை இடித்தவர்களை கைது செய்யவில்லை.
நாங்கள் திருப்பணி செய்யவும், மதில்சுவரை மீண்டும் கட்டுவதற்கும் ஆக்கிரமிப்பாளர்கள் இடையூறாக உள்ளனர். எனவே, உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

