/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
/
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
ADDED : மார் 17, 2025 11:51 PM

காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கோட்டூரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு, கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், நேற்று, காலை 11:00 மணிக்கு, மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், பட்டா, ஆக்கிரமிப்பு, உதவித்தொகை என, பல்வேறு வகையிலான கோரிக்கைககள் தொடர்பாக, 631 பேர் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டவாக்கம் ஊராட்சிக்கும்.
ஜாதி வேறுபாடுகளற்ற மயானம் பயன்படுத்தும் சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வரதராஜபுரம் மற்றும் நாட்டரசன்பட்டு ஆகிய ஊராட்சிகளுக்கு, தலா, 10 லட்சம் ரூபாயை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, குரூப் - 4 மூலம் தேர்வான ஒன்பது பேருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
மேலும், முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற காஞ்சிபுரம் மகளிர் சிறப்பு விளையாட்டு விடுதி மாணவியருக்கு, கலெக்டர் கலைச்செல்வி வாழ்த்து தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டூர் எல்லையில், புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அனைத்து ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், கடை திறக்க தடை விதிக்க வேண்டும் என, கிராம மக்கள் மனு அளித்தனர்.
கண்டிவாக்கம், துளசாபுரம், கோட்டூர் உள்ளிட்ட ஐந்து கிராமத்தினர், இந்த டாஸ்மாக் கடையால் பாதிக்கப்படுவர் எனவும், டாஸ்மாக் கடை வழியாக கோவிலுக்கும், பள்ளிக்கும் செல்வர் என்பதால், டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்கக்கூடாது என புகார் அளித்துள்ளனர்.
மேலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், புதியவர்களுக்கு கேபிள் ஆப்பரேட்டர் லைசன்ஸ் வழங்கக்கூடாது என, கேபிள் ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர், கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள தனியார் செட்டாப் பாக்ஸ்களை எடுத்துவிட்டு, அரசு செட்டாப் பாக்ஸ்களை பொருத்த நிர்பந்தம் செய்வதாக புகாரில் தெரிவித்துள்ளனர்.