/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திட்டப்பணி நிறுத்தம் குறித்து கலெக்டரிடம் மனு
/
திட்டப்பணி நிறுத்தம் குறித்து கலெக்டரிடம் மனு
ADDED : பிப் 08, 2024 09:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பழவேரி ஊராட்சியில், 2020ல் கனிமவள நிதி மற்றும் 'ஜல்ஜீவன் மிஷன்' திட்டத்தில் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிதளம் போடப்பட்டது.
அதை பழவேரி ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் அப்புறப்படுத்திவிட்டு தற்போது வேறு இடத்தில் அதற்கான பணி மேற்கொள்கின்றனர்.
எனவே, முன்னதாக மேற்கொண்ட அப்பணிக்கு செலவினத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

