/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் இடையே பேருந்து வசதி கோரி கலெக்டரிடம் மனு

ADDED : ஜூலை 14, 2025 11:49 PM
வாலாஜாபாத், வாலாஜாபாத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம் வரை அரசு அல்லது மினி பேருந்து சேவைக்கோரி, காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை கேட்பு முகாமில், வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த எம்.சிபி என்பவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதேபோல, வாலாஜாபாத் சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இப்பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் மாணவ - மாணவியர் உள்ளிட்ட பல தரப்பினரும் தினமும் சுங்குவார்சத்திரம் சென்று அங்கிருந்து, ஸ்ரீபெரும்புதுார், மப்பேடு மற்றும் பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலை மற்றும் கல்வி கூடங்களுக்கு சென்று வருகின்றனர்.
வாலாஜாபாத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம் செல்ல போதுமான பேருந்து வசதி இல்லாததால், குறித்த நேரத்திற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல இயலாமல் பல தரப்பினரும் தவித்து வருகின்றனர்.
எனவே, வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் இடையே அரசு அல்லது மினிப் பேருந்து சேவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.